கரூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி.
கரூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-09 12:46 GMT
சதுரங்க போட்டி
கரூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வி என் சி மஹாலில், கார்பசேவ் சதுரங்க போட்டி அமைப்பும்,டி.சி.பி வங்கியும் இணைந்து நேற்று நடத்திய, மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் ஏராளமான மாணவ - மாணவிகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டிகளை தாந்தோணிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேங்க் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ், ஆதிரியன் பள்ளி தாளாளர் ரகுபதி, வழக்கறிஞர் ரமணி, டிசிபி வங்கி மேலாளர் ரங்கநாதன் மற்றும் விளையாட்டு முரசு இதழ் நிறுவனர் கமாலுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சதுரங்கப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.