மாநில அளவிலான ஹாக்கி போட்டி

மணப்பாறையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடந்தன.

Update: 2023-12-07 15:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 64 வது குடியரசு தின விழா மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் 6 நாட்கள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன. முதல் 3 நாட்கள் பெண்களுக்கான அணியினருக்கும், இரண்டாவது 3 நாட்கள் ஆண்களுக்கான அணியினருக்கும் தனித்தனியாக நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் விளையாட்டு விடுதி மாணவர்களும், திண்டுக்கல் அணியினரும் மோதினர். இதில் ராமநாதபுரம் அணி முதலிடத்தை பிடித்தது. இதே போல் பெண் பிரிவில் வேலூர் மாவட்டம், கார்னாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது.

Tags:    

Similar News