மாநில அளவிலான கராத்தே போட்டி; திருவண்ணாமலை மாணவி தங்கம்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருவண்ணாமலையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி யோகேஷ்வரி தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

Update: 2024-01-18 11:31 GMT

 மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருவண்ணாமலையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி யோகேஷ்வரி தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகள் ஜேப்பியார் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக இந்தோ-அமெரிக்கன் பள்ளி மாணவ மாணவிகள் 8 பேர் கலந்துக் கொண்டனர். அதில் இந்தோ-அமெரிக்கன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ம.யோகேஷ்வரி கராத்தே போட்டியில் 68 கிலோ எடை பிரிவில் மாநில அளவில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்று பள்ளிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தாளாளர் இராதாகிருஷ்ணன், இயக்குனர் சுவதந்திரா இராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வர் அ.ப. சையத் அப்துல் இலியாஸ், துணை முதல்வர் க.கோவேந்தன், மூத்த முதுகலை ஆசிரியர் தெ.ரா.செல்வமணி உடற்கல்வி ஆசிரியர்கள் சீ. ராதிகா, சு. அருண்குமார், ஜெ. பாலமுருகன், கே.சக்திவேல் மற்றும் கராத்தே பயிற்சியாளர் ரா. சந்திரசேகரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினார்கள்.

Tags:    

Similar News