நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் தொடக்கம் !!
நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம் குறிஞ்சி மேல்நிலைப் பள்ளியில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் கிளஸ்டர் 6 சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நாமக்கல் காவேட்டிப்பட்டியில் உள்ள குறிஞ்சி சிபிஎஸ்சி சீனியர் செகண்டரி பள்ளியில் துவங்கிய நிலையில் பள்ளி தாளாளர் தங்கவேலு துவக்க விழாவிற்கு தலைமை வகித்தார். பள்ளி இயக்குனர் தேவியண்ணன், தமிழ்நாடு வாலிபால் அசோசியேசன் செயலாளர் சதாசிவம், வாலிபால் இயக்குனர் ராமகிருஷ்ணன், சிபிஎஸ்சி கிளஸ்டர் 6 ஒருங்கிணைப்பாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் எஸ்.பி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவங்கி வைத்து பேசினார்.
அவர் பேசியது; அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்வியுடன் விளையாட்டும் முக்கியமான ஒன்றாகும் இளம் வயதில் விளையாட்டுகளில் ஆர்வமாக ஈடுபட்டவர்களுக்கு உடல்நலம் மேம்படும் இதனால் மன உறுதி ஏற்பட்டு படிப்பிலும் சிறந்து விளங்க முடியும் வாலிபால், பேஸ்கெட் பால் கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் மாணவர்களின் தலைமை பண்பு வளரும். இது மாணவ மாணவிகளுக்கு இடையே பிற்காலத்தில் தன்னம்பிக்கையை வளர்க்கும் எனவே மாணவ மாணவிகள் கல்விக்கு இணையாக விளையாட்டிற்கும் முக்கியத்துவம் செலுத்த வேண்டும் என அவர் பேசியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளியில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தம் பத்து வாலிபால் மைதானங்களில் பகல் நேரத்திலும் இரவு மின்னொளியிலும் போட்டிகள் நடைபெறுகிறது. 9 ,10 ,11 தேதிகளில் பெண்கள் வாலிபால் போட்டியும் 12 ,13 ,14 ஆகிய தேதிகளில் ஆண்கள் பிரிவிற்கான வாலிபால் போட்டிகளும் நடைபெறும் எனவும் வெற்றி பெறும் அணிகளுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.