மின் மோட்டார் ஒயர்களை திருட்டு

லால்குடி அருகே ஒரத்தூர் கிராமத்தில் ஒரே இரவில் 7 விவசாய நிலங்களில் இருந்த நீர்மூழ்கி மின் மோட்டார் ஒயர்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.;

Update: 2024-06-13 01:05 GMT

லால்குடி அருகே ஒரத்தூர் கிராமத்தில் ஒரே இரவில் 7 விவசாய நிலங்களில் இருந்த நீர்மூழ்கி மின் மோட்டார் ஒயர்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிர் சாகுபடி செய்வதற்க்காக ஆழ்துளை கிணறு அமைத்து அதில் நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவில் ஒரத்தூர் கிராமத்திற்கு வந்த மர்ம ஆசாமிகள் விவசாயிகள் மணிவேல்,சின்னத்துரை,தங்கத்தையா,மணி,சிவலிங்கம், சேகர் மற்றும் நடராஜன் ஆகியோர்களின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி மின் மோட்டாரின் ஒயர்களை திருடிச் சென்றனர்.

Advertisement

இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் மின் மோட்டார் ஒயர்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதுபோல் பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.ஒரே இரவில் 7 மின் மோட்டார் ஒயர்களை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News