அரசு பேருந்து மீது கல் வீச்சு - இருவருக்கு போலீசார் வலை
ஆத்தூர் அருகே அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.;
Update: 2023-10-20 03:56 GMT
அரசு பேருந்து முன்பக்க கண்ணாடி சேதம்
ஆத்தூரில் இருந்து தம்மம்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு நகர பேருந்து சென்றது. பேருந்தை ரவி ஓட்டிவந்தார். இரவு 9 மணியளவில் நாகியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக நின்றது. அப்போது எதிரே பைக்கில் வந்த இருவர் பேருந்தின் முன்புற கண்ணாடி மீது கல்லை வீசிவிட்டு தப்பி சென்றனர்.இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இதுகுறித்த புகாரின்பேரில் தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.