பாலக்காடு ரயில் நின்று செல்லக்கோரி மத்திய இணை அமைச்சரிடம் மனு

செங்கநல்லூரில் பாலக்காடு ரயில் நின்று செல்லக்கோரி மத்திய இணை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-10-29 10:35 GMT

மத்திய அமைச்சரிடம் மனு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செய்துங்கநல்லூரில் உள்ள பா.ம.க. துணை தலைவர் கஸாலி இல்லத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வருகை தந்தார். அவரை கஸாலி குடும்பத்தினர் வரவேற்றனர்.  மத்திய இணை அமைச்சர் எல். முருகனிடம், செய்துங்கநல்லூரை சேர்ந்த வழக்கறிஞர் கோதர், அப்துல் ஆகியோர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: செய்துங்கநல்லூரில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். செய்துங்கநல்லூரை சுற்றி 34 கிராமங்கள் உள்ளன. செய்துங்கநல்லூர் கொரானா காலத்துக்கு முன்பு வரை அனைத்து ரயில்களும் நின்று சென்றன. ஆனால் தற்போது திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூரில் நின்று செல்லவில்லை.  எனவே தாங்கள் இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதோ போல் வடக்கே பாரத பிரதமர் மோடி கங்கையை சுத்தம் செய்தது போல தெற்கே தாமிரபரணியையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று மற்றொரு மனுவையும் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட மத்திய இணை அமைச்சர் ஆவண செய்வதாக வாக்களித்தார். அதன் பின் கஸ்ஸாலி அவர்களின் மகள் மற்றும் மருமகனை நேரில் வாழ்த்தினார்.
Tags:    

Similar News