ஈரோட்டில் தம்பி செல்போன் தராத்தால் மாணவி தற்கொலை
ஈரோட்டில் தம்பி செல்போன் தராத்தால் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-23 13:36 GMT
காவல் நிலையம்
ஈரோடு நஞ்சை காளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி - மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு 9 ம் வகுப்பு படிக்கும் தர்ஷினி என்ற மகளும் , 3 ம் வகுப்பு படிக்கும் அஷ்வின் என்ற மகனும் உள்ளனர். தர்ஷினிக்கும் அவரது தம்பி அஷ்வினுக்கும் செல்போனில் கேம் விளையாடுவது சம்மந்தமாக அடிக்கடி சண்டை ஏற்படும் வழக்கம்.
இந்த நிலையில் தர்ஷினிக்கு அவரது தம்பி அஷ்வின் செல்போன் தர மறுத்ததால் கோபமடைந்த தர்ஷினி படுக்கை அறைக்குள் சென்று கதவை தாளிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மலையம்பாளையம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.