கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக பலி

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-18 04:15 GMT

கிணற்றில் வீழ்ந்தவர் பலி

செல்லூர் சர்ச் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. அவனியாபுரத்தில் உள்ள கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி சந்திரா மற்றும் மகன் ராஜேஷுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அழகர்சாமியின் மகன் ராஜேஷ் (வயது 15) பள்ளி மாணவன் 10ம் வகுப்பு படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில், 11ம் வகுப்புக்கு பள்ளி கட்டணம் செலுத்தியுள்ளனர். இதற்கிடையே பள்ளி விடுமுறை என்பதால் இன்று காலை ராஜேஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் குளிக்க சென்றார். மதுரை குலமங்கலம் வடுகபட்டி ரோடு பகுதியில் உள்ள தோப்பில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென கிணற்று நீரில் குதித்துள்ளார்.

Advertisement

அப்போது மற்ற நண்பர்கள் விளையாட்டிற்காக தண்ணீரில் மூழ்கியதாக நினைத்தனர். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் நண்பர்கள் அனைவரும் அவரை காப்பாற்ற முயன்றனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைக்காமல் ராஜேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது பெற்றோர் அங்கு செல்வதற்குள் ராஜேஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அலங்காநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பள்ளி மாணவர் ராஜேஷ் சிலம்ப போட்டியில் சிறந்து விளங்கி பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் பள்ளி விடுமுறை நாளில் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News