குளிக்கும் போது தடுப்பணையில் மூழ்கி மாணவன் சாவு 

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் தடுப்பணையில் மோதி மாணவன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-05 04:21 GMT
தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த சுந்தர்

கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சுந்தர் (17). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தொழிற்கல்வி கல்லூரியில்  முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று தனது சக நண்பர்கள் நான்கு பேருடன் பூதப்பாண்டி அருகே  மண்ணடி பகுதியில் உள்ள தடுப்பணைக்கு சென்றுள்ளனர்.

அங்கு நண்பர்களுடன் உற்சாகமாக குளிக்க தடுப்பணையில் இறங்கினார்கள்.  இதில் சுந்தர் மற்றும் நண்பர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. அந்த சமயத்தில் திடீரென சுந்தர்  ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை கவனித்த சக நண்பர்கள் காப்பாற்ற முடியாமல் பரிதவித்தனர்.       உடனே அந்தப் பகுதியில் நின்றவர்கள் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடினர்.  பின்னர் நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கிய சுந்தர் உடலை  பிணமாக மீட்டனர். பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News