தீர்த்தமலை அருகே மாணவி மாயம் - காவல்துறையினர் விசாரணை
தீர்த்தமலை அருகே தேர்வு எழுத சென்ற மாணவி மாயம் தந்தை காவல் நிலையத்தில் புகார் காவல்துறையினர் விசாரணை.;
Update: 2024-03-27 09:18 GMT
காவல்துறை விசாரணை
police station
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 17வயது மகள், தீர்த்த மலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது பெற்றோர்கள் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து, அவரது தந்தை கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வருகின்றனர்.