முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவி தேசிய அளவில் சாதனை

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவி தேசிய அளவில் சாதனை.

Update: 2023-12-10 17:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம், மத்திய கல்வி அமைச்சகம், எ.ஆர்.எம் கல்வி சமுதாயம், எஸ்.டி.எம் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இணைந்து தேசிய அளவில் “இன்வென்டர்ஸ் சேலன்ஞ்-2023 என்ற தலைப்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கருத்துருப் போட்டியை நடத்தின. புதுபிக்கத்தக்க ஆற்றல், ஆரோக்கியம், நல்வாழ்வு, தூய்மை, மலிவான ஆற்றல்கள், தொழில்துறையில் புத்தாக்கம், உறுதியான கட்டிடங்கள் மற்றும் நிலையான சமுதாயம் ஆகிய தளங்களில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரவும் இப்போட்டி நடத்தப்பட்டது.

நாடு முமுவதும் இருந்து பெறப்பட்ட 1372 கருத்துருக்களில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான 80 கருத்துகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. படைப்பாற்றல், கருத்துருவின் புதுமை, பயன்பாடு ஆகியவற்றை மையமாக வைத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் அகில இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 கல்லூரிகளில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியின் இரண்டாமாண்டு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை மாணவி எஸ். சௌபர்னிக்கா வெற்றி பெற்றுள்ளார். புது டெல்லியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜி.நி சீதாராம் மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுத்தொகை ரூ 50000/-க்கான காசோலையையும் வழங்கினார். ராசிபுரம் முத்தாயம்மாள் எஜிகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேசன் தாளாளர் ஆர். கந்தசாமி, செயலாளர் மற்றும் மேனேஜிங் டிரஸ்டி முனைவர் கே.குணசேகரன், இணைச்செயலாளர் பொறியாளர் ஜி.ராகுல் ஆகியோர் அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி, இதற்கு உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர் பேராசிரியர் எம். மாதேஸ்வரன், பேராசிரியர் ப.கோபி , துறைத்தலைவர் களுக்கும், மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News