காவல் நிலையத்திற்கு விசிட் செய்த மாணவர் காவல் படை
By : King 24X7 News (B)
Update: 2023-10-22 09:04 GMT
மாணவர் படை
உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலத்தில், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், மாணவர் காவல் படையை சேர்ந்த மாணவர்கள், நேற்று உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு சென்று காவலர்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்பள்ளி ஆசிரியர் மேனகா தலைமையில், காவலர் சீருடைகள் அணிந்து வந்த மாணவர்கள், காவல் நிலையத்தின் நிகழ்வுகளை பார்வையிட்டனர்.
உத்திரமேரூர் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், காவல் படை சேர்ந்த மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் உட்பட பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினர். வாகனங்கள் செல்வதை முறைப் படுத்துதல், இருசக்கர வாகனங்களை பாதுகாப்பாக இயக்க தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.