மாணவர் சங்கம் பொதுக்குழு கூட்டம்

தர்மபுரி மேற்கு மாவட்ட மாணவர் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2024-03-06 02:22 GMT
தர்மபுரி மேற்கு மாவட்ட மாணவர் சங்கம் பொது குழு கூட்டம் தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்தில் நகர் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், மற்றும் தர்மபுரி ஒன்றிய மாணவர் சங்கம் நிர்வாகிகளுக்கு நியமன கடிதம் வழங்கினார். இக்கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட பாமக மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News