பொங்கல் விழாவில் அசத்திய மாணவர்கள்

கரூர், வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில், கயிற்றின் மீது ஏறி ஆசனங்களை செய்து மாணவர்கள் அசத்தினர்.

Update: 2024-01-12 12:21 GMT

கரூர் மாவட்டம், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரியில் இன்று பொங்கல் விழா, கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் "ஓடி விளையாடு பண்ணோக்கு பயிற்சி மையத்தின்" பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டனர். அப்போது, கயிறுகளை கட்டி தொங்கவிட்டு, அதன் மீது ஏறி பல்வேறு ஆசனங்களை அமைத்து, பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். மேலும், ஒற்றை மரத்தின் மீது ஏறி மயிர் கூச்செறியும் வகையில் பல்வேறு உடல் அசைவுகளை வெளிப்படுத்தியும், பல்வேறு ஆசனங்களை செய்து காட்டியும் கல்லூரி மாணவ- மாணவியரை தன் வசப்படுத்தினர் மாணவர்கள். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் ஹேமலதா, கல்லூரியின் முதல்வர் இருளப்பன், கல்லூரியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டு விமரிசையாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.

Tags:    

Similar News