அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி அசத்திய மாணவிகள்!

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி "ஹேக்கதான் 2024'' போட்டிகள் நடைபெற்றது.

Update: 2024-03-09 02:31 GMT

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி "ஹேக்கதான் 2024'' போட்டிகள் நடைபெற்றது.


கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவிகள் மட்டும் பங்கேற்ற "ஹேக்கதான் 2024'' போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியினை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி,கல்லூரி தலைவர் இந்து முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

300-க்கும் மேற்பட்ட குழுக்களை சேர்ந்த மாணவிகள் தங்களது ஏராளமான கண்டுபிடிப்புகளை இந்த போட்டியில் காட்சிப்படுத்தினர்.அட்மையா பல்கலைக்கழகத்தின் கௌரவ தலைவர் சீலா ராமச்சந்திரன்,தசால்ட் சிஸ்டம் நிறுவனத்தில் துணைத் தலைவர் ரவிக்குமார்,கொடிசியா அமைப்பின் தலைவர் திருஞானம்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மண்டல மேலாளர் விஜயா ஆகியோர் மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டனர். அப்போது நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் செயல் விளக்கம் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தனர்.

இது குறித்து கல்லூரியின் தலைவர் இந்து முருகேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த ஹேக்தானில் 300க்கும் மேற்பட்ட அணிகள் 700க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் என 72 கல்லூரிகளில் இருந்து பங்கேற்றதாக தெரிவித்தார்.முற்றிலும் தொழில்நுட்ப அறிவியல் படிக்கும் மாணவிகள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்றுள்ளதாகவும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகையுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது என்றவர் பொறியியல் படிப்பை பொருத்தவரை மாணவிகள் பெரும்பாலும் கணினி சார்ந்த படிப்புகளை மட்டுமே அதிகம் தெரிவு செய்கின்றனர்.

இதர தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் மாணவிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு ஹேக்கத்தான் போட்டியை முன்னெடுத்தோம் என தெரிவித்தார்.குறித்து கல்லூரி மாணவிகள் கூறும்போது இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் படிக்கும்போதே அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவிகளால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கிறது எனவும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றால் மாணவிகள் மாணவிகளின் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும் எனவும் மேலும் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News