வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
Update: 2023-11-15 09:14 GMT
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் புவியியல் துறை இயக்குனர் நிர்மல்ராஜ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது .கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்சாரு ஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.