வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலரும்,தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மை செயலாளருமான தீரஜ் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை துறையிலிருந்து வருவாய் துறைக்கு ஒப்படைக்கப்பட்ட தானயங்கி வானிலை மையங்கள் விவரங்கள். வருவாய் துறை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகள் நிவாரண முகாம்கள் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்.ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை தூர் வார அதிக முக்கியத்துவம் தர வேண்டும்,மழைநீர் தேங்ககூடிய குடியிருப்பு பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு நீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழைகாலங்களில் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யதல். பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) மூலம் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் கால்வாய் தூர்வாரப்பட்டு மழை வெள்ளம் எவ்வித தடங்களின்றி ஏரிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டும்.ஏரி கரைகளில் உடைப்பு ஏற்படும் நேர்வுகளில் அதனை உடனடியாக சரிசெய்ய தேவையான மணல் மூட்டைகள் மரக்கட்டைகள் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். பாலங்கள் மற்றும் மதகுகளை சுத்தம் செய்து தடையற்ற நீரோட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். அதிக அளவு திறன் கொண்ட மோட்டார் பம்புகள் ஹோஸ் பைப்புகள் தாழ்வான பகுதிகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து துறையின் மூலம் தனியார் பேருந்துகள், லாரிகள், டிரக்குகள் ஆகியவற்றின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் அவற்றின் ஓட்டுநர்களின் விவரங்களை சேகரித்து வைத்திருத்தல் வேண்டும். பேரிடர் காலத்தில் மீட்பு குழுவினை அழைத்து செல்ல மீட்பு உபகரணங்களை கொண்டு செல்லவும், நிவாரண பொருட்களை கொண்டு செல்ல இவைகளின் பங்கு முக்கியமானதாக இருக்கும். அதேபோல் சுகாதார துறை மூலமாக மருத்துவ மனைகளில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும் வகையில் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் கருவிகள்,மருந்துகள் மற்றும் பாம்பு கடிக்கு எதிரான மாற்று மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு வைத்திருத்தல் வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மூலம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றுவதற்கான திட்டத்தினை வகுக்க வேண்டும். மேலும் வட்ட அளவில் ஒத்திகை பேச்சு மேற்கொள்ள வேண்டும். அதேபோல் பள்ளி கட்டடங்கள் நல்ல உறுதி தன்மை கொண்டதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை பேரிடர் கால மீட்பு நடவடிக்கை குறித்த பேரிடர் மேலாண்மை திட்டத்தினை தயார் செய்ய வேண்டும். உணவு வழங்கல் துறையின் மூலம் அத்தியாவசிய பொருட்களை போதுமான அளவு கையிருப்பு வைத்திருத்தல் வேண்டும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் சேதமடைந்த மின்கம்பங்கள் அனைத்தும் உடனடியாக மாற்றம் செய்திருக்க வேண்டும். மேலும் பல்வேறு துறையின் மூலம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக, ஆரணி வட்டம் தச்சூர் கிராமத்தில் வசித்து வந்த மார்கண்டேயன் என்பவர் கடந்த 8ம் தேதி இடி, மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவர் குடும்பத்திற்கு ரூ. 4 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கப்பட்டது.மேலும் 18 ஆடுகள் இடி மின்னல் தாக்கி இறந்ததன் காரணமாக ஆட்டு உரிமையாளரிடம் ரூ. 54 ஆயிரத்துக்கான உடன் நிதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர், மரு.மு.பிரியதர்ஷினி, செய்யார் சார் ஆட்சியர், அனாமிகா, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் (வளர்ச்சி) ஆட்சியர், செ.ஆ.ரிஷப், மற்றும் துறை அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.