திருப்பூரில் எம்எல்ஏ பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆய்வு

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து திருப்பூர் எம்எல்ஏ கே. என்.விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-02-12 09:16 GMT

எம்எல்ஏ ஆய்வு 

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோல்டன் நகர் பகுதி ராஜமாதா நகர் முதல் வீதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை இன்று திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தார் சாலை அமைப்பது, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News