கோம்பெறிக்காடு பகுதியில் தார் சாலை அமைக்க ஆய்வு

நல்லம்பள்ளி அருகே கோம்பெறிக்காடு பகுதியில் புதிய கார் சிலை அமைக்க தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தர்மபுரி எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-16 13:01 GMT

ஆய்வு மேற்கொண்ட போது

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட மிட்டா ரெட்டி அள்ளி அருகே உள்ள கோம்பேறிக் காடு வரை புதிய தார்சாலை அமைக்க பொதுமக்கள் பல நாட்களாக தொடர்ந்து வலியுறுத்ததை எடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் ஒருநாள் இரவு முழுவதும் அங்கு தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த நிலையில் நேற்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாவட்ட உயர் அலுவலர்கள் என பலரும் அப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News