தூய யோவான் பேராலய பிரதிஷ்டை அசன விழா!
நாசரேத் தூய யோவான் பேராலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற அசன விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத் தின் தலைமை தேவாலயமான (கதீட்ரல்) நாசரேத் தூய யோவான் பேராலயத்தின் 96 வது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா கடந்த 5 ஆம்தேதி துவங்கி 7 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலை ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் பஜனை பிரசங்கம் நிகழ்ச்சி ஸ்ரீவைகுண் டம் சேகர தலைவரும் ,குருவானவ ருமான வேதநாயகம் தலைமையில் நடைபெற்றது.
2-வது நாள் மாலை ஐ.எம்.எஸ். இந்திய மிஷனெரி சங்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 3- வதுநாள் மாலை நெல்லை வாழ் நாசரேத் வட்டார மக்கள் ஐக்கியம் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.4-வது நாள் மாலை சென்னை வாழ் நாசரேத் மக்கள் சங்கம்சா ர்பில் சின்னச் சின்ன வெளிச்சம் புகழ் அருள்பிரகாசம் குழுவினரின் மிஷனரிகள் பணியால் இந்த மண்ணில் நிகழ்ந்தது சமய புரட்சியே! சமுதாய புரட்சியே! என்ற பட்டி மன்றம் நடைபெற்றது.
5வது நாள் மாலை நாசரேத் சொர்க்கவாசல்ஜெபக்குழு சார்பில் இந்திய மிஷனெரி சாது சுந்தர்சிங் வாழ்க்கை வரலாறு நிகழ்ச்சியை சித்தரிக்கும் சாது என்ற ஒலி, ஒளி நாடகம் நடைபெற்றது. 6 வது நாள் பேராலயத்தில் குடும்ப உபவாச கூடுகை நிகழ்ச்சி பசுமலை தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. மாலையில் பேராலய வாலிபர் ஐக்கிய சங்கத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.மாலை ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழிப்பாராதனை நடை பெற்றது.