நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்; விவசாயிகள் வேதனை
மதுராந்தகம் அருகே 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நெற்பயிர்கள் முழுவதும் மூழ்கியதால், விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு ,ஓனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் உள்ள வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போது நெல் விவசாயம் செய்வதற்காக நெல் நாற்று விட்டு நெல் பயிர் பிரித்து நடப்பட்டன. வளிமண்டல மேலடுக்கு சுயேட்சியின் காரணமாக தற்பொழுது நேற்று மாலை முதல் பெய்து வரும் மிக கனமழையின் காரணமாக தொடர்ந்து வரும் நீர் வரத்தால் மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு ஓனம்பாக்கம் உள்ளிட்ட வயல் வெளி பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நெற்பயிர்கள் முழுவதும் மூழ்கின.இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்தனர்.
வடகிழக்கு பருவ மழை தொடக்கத்தில் பெய்த கன மழையால் சென்னை மாவட்டம் பாதித்தது. அதனைத் தொடர்ந்து,தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிக அளவிலான கனமழையால் மழை வெள்ளை பெருக்கால் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர்,கடந்த 10 நாட்களாக மழையின்றி இருந்த நிலையில் மீண்டும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ஏற்பட்ட கனமழையால் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை தற்போது மழை பெய்து வருகிறது.