சாய ஆலைகளுக்கு நிலத்தடி நீர் எடுக்க திடீர் தடை

Update: 2023-10-25 12:55 GMT

எச்சரிக்கை பலகை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் கலியனூர் பஞ்சாயத்து பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததின் காரணமாக, களியனூர் பஞ்சாயத்து பகுதி முழுவதும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பஞ்சாயத்து பகுதியில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வரும் நிலையில் ,அந்த சாயப்பட்டறைகளுக்கு நிலத்தடி நீர் லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கலியனூர் பஞ்சாயத்து நிர்வாகம் சாய ஆலைகளுக்கு நிலத்தடி நீரை எடுக்க தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு பேனர் கலியனூர் பஞ்சாயத்தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. தடைகளை மீறி சாய ஆலைகளுக்கு நிலத்தடி நீர் கொண்டு செல்லப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News