சாலையோர வாகன நிறுத்தத்தால் வாகன ஓட்டிகள் அவதி

பவுஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரேயுள்ள பஜார் வீதியில் சரக்கு வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.

Update: 2024-04-18 04:21 GMT

பவுஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரேயுள்ள பஜார் வீதியில் சரக்கு வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். 

பவுஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே பஜார் வீதியுள்ளது. இந்த பஜார் வீதி மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இப்பகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம்,வேளாண் அலுவலகம், பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை, மார்க்கெட் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பஜார் வீதி வழியாக, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

இங்கு அமைக்கப்பட்டு உள்ள சாலையின் மொத்த அகலம் 7 மீட்டர்.உள்ள சாலையின் மொத்த அகலம் 7 மீட்டர். இதில், பஜார் பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து செல்பவர்களின் வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு பொருட்கள் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் கார், வேன், பேருந்து, லாரி உள்ளிட்டவை சென்று வர போதிய இடவசதி இல்லாமல், பஜார் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், காலை - மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும், சாலையோரம் வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News