கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் !

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது.;

Update: 2024-07-11 04:46 GMT
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் !

ஆர்ப்பாட்டம்

  • whatsapp icon

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, தரணி ஆலை சங்க செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். சங்க தலைவர் ரகுராமன், பொருளாளர் சாந்தமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

ஆலை சங்க மாநில தலைவர் வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி துவக்க உரையாற்றினர். தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, விவசாயிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

Tags:    

Similar News