கடம்பூர் மலைப் பகுதியில் கரும்பு லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
கடம்பூர் மலைப் பகுதியில் கரும்பு லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-03-18 08:22 GMT
லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (45), என்பவர் கடம்பூர் அடுத்த கோட்டமாளத்தில் இருந்து லாரியை ஓட்டிக்கொண்டு கரும்பு லோடுடன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது கோட்டமாளம் பகுதியில் லாரி வந்து கொண்டு இருக்கும் போது அந்த பகுதியில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த லாரியில் ஓட்டுநர் உட்பட 1-ஆண் மற்றும் 5 பெண்கள் என 6 பேர் பயணம் செய்துள்ளனர், இதில் ராஜாமணி (35) என்ற பெண்ணுக்கு தலை மற்றும் கையில் இரத்த காயம் ஏற்பட்டது, அருகில் இருந்தோர் உதவியுடன் ராஜாமணி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள 5 நபர்களுக்கு சிறு சிறு காயங்களுடன் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்