கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 500 வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டுமென் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-12-13 06:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரும்பு அறுவடை துவங்கிய நிலையில் விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் பேரவை கூட்டம் நடைபெற்றது இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் மத்திய அரசாங்கம் கரும்பின் விலையானது டன் ஒன்றுக்கு 5 ஆயிரமும் மாநில அரசு டன் ஒன்றுக்கு ஊக்க தொகையாக 500 ரூபாய் வழங்க வேண்டுமெனவும் மத்திய அரசு 2023- 24 ஆம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கு டன் ஒன்றுக்கு 3150 அறிவிக்கிறார்கள் ஆனால் கிடைப்பதே 2828 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும் மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு தொகை பிழித்திறன் அடிப்படையில் கிடைப்பதால் ஒரே மாதிரியான பிழித்திறன் அடிப்படையில் கரும்பு தொகையை வழங்க வேண்டும் என கூறினார்.

மேலும் கரும்பினால் கிடைக்கும் எத்தனால் கொண்டு சாராயம் கிடைக்கின்ற நிலையில் சரியான விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கரும்பு விலையும் ஊக்கத்தொகையும் உயர்த்த வேண்டுமெனவும் கரும்பிற்கான உரத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் கரும்பின் டன் ஒன்றிற்கான விலையை அதிகாரிக்காமல் மத்திய அரசு உள்ளதாக தெரிவித்தார். பேட்டி - பண்டியன் (முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் )

Tags:    

Similar News