ஆனந்த மாரியம்மன் கோவிலில் கோடை அபிஷேக விழா
கும்பகோணம் அருகே ஆனந்தமாரியம்மன் கோவிலில் நடந்த கோடை அபிஷேக விழாவில் திரளான பகதர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.;
Update: 2024-05-12 01:37 GMT
ஆனந்தமாரியம்மன்
குடந்தை அருகே பெரும்பாண்டி ஊராட்சி புது ராம்நகர் ஆனந்தமாரியம்மன் கோயிலில் 17ம் ஆண்டு கோடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 21ம்தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி தினமும் ஆனந்த மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. முக்கிய விழவாக நேற்று பகவத் காவிரி படித்துறையில் இருந்து பக்தர்கள் மகா சக்திகரகம், வேல், அக்னி கொப்பரை, பால்குடம், காவடி, அலகு காவடி, அலகு கத்தி குத்துதல் மற்றும் விநாயகர், பரமசிவம் பார்வதி வேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று (6ம்தேதி) முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (7ம்தேதி) அக்னி கொப்பரையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் வீதியுலா, நாளை (8ம்தேதி) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடக்கிறது