கோடை கால சிலம்பம் பயிற்சி முகாம்

நாமக்கல்லில் கோடை கால சிலம்பம் பயிற்சி முகாமில் சிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Update: 2024-04-23 07:57 GMT
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பக்கலையை ஊக்குவிக்கும் வகையிலும், அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள கந்தசாமி கண்டர் பள்ளி மைதானத்தில் காலை 6-30 முதல் 8 மணி வரை மாணவ மாணவியர்களுக்கான சிலம்பம் பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடந்து வருகிறது.... நாமக்கல் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில், கோடை காலத்தில் மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்கும் நோக்கில், இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கான சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்முகாம் ஏப்ரல் 20- முதல் மே 30 வரை நடைபெற உள்ளது. தலைமை பயிற்சியாளர் கார்த்திகேயன் கூறுகையில், ''இன்றைய பள்ளி மாணவர்கள், தற்காப்பு கலையை கற்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். குறிப்பாக பெண் குழந்தைகள். இப்பயிற்சி முகாம் மூலமாக சிலம்பம் போட்டியின் அடிப்படை விதிமுறை, சிலம்பம் வீச்சு, முன்கரணம், பின்கரணம், உடல் திறன் மேம்பாடு போன்ற தகவல்களை கற்றுத்தரப்படுகிறது. பங்கேற்க விருப்பமுடைய குழந்தைகள், 9965208633 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Tags:    

Similar News