இலுப்பூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் சப்ளை: பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

இலுப்பூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் சப்ளை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2024-05-05 08:40 GMT

குடிநீர் தொட்டி

இலுப்பூர் பேரூராட்சியில் கடந்த 10 நாட்களாக குடியிருப்போர் பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிய பொதுமக்கள், குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கோடையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இவை அனைத்தும் பராமரிப்பு இல்லாமலும், தண்ணீர் நிரப்பப்படாமலும் காலியாக வைக்கப்பட்டுள்ளன.கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலுப்பூரில் உள்ள சில வார்டுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் அந்த தண்ணீர் கழிவும், சேறும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வாடையுடன் வந்த தண்ணீரை குடங்களில் பிடித்த பொதுமக்கள், அதுகுறித்து பேரூராட்சியினருக்கு தகவல் தெரிவித்த பின்பும் அதற்கான காரணம் குறித்து அவர்கள் விளக்கம் அளிக்கவோ அல்லது கழிவுநீர் எப்படி கலந்தது என ஆய்வு செய்யாததால் அனைத்து தரப்பினரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இலுப்பூர் பேரூராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News