கண்டிபுதூர் அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

பள்ளிபாளையம் கண்டிபுதூர் அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

Update: 2024-04-01 13:23 GMT

உபகரணங்கள் வழங்கல் 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிபுதூர் பகுதியில், நகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசு பள்ளிக்கு ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வேண்டுமென பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  பள்ளி மேலாண்மை குழு நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதனை அடுத்து கண்டிப்புதூர்  நகராட்சி துவக்க பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் ,பள்ளி மேலாண்மை குழுவினர் ,

சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் சுமார் 22,000 மதிப்பில் ஜெராக்ஸ் இயந்திரம் , 15000 ரூபாய் மதிப்பீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை அரசு பள்ளிக்கு வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள்

முன்னிலையில் அரசுப் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் அரசு பள்ளி முன்னால் மாணவர் ஆதவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

Tags:    

Similar News