சத்துணவு மையங்களுக்கு பாத்திரங்கள் வழங்கல் !
சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-13 05:09 GMT
பாத்திரங்கள் வழங்கல்
சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பி.டி.ஓ., செல்லதுரை தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஒன்றிய தலைவர் திலகவதி நாகராஜன் 40 சத்துணவு மையங்களுக்கு குக்கர் உள்ளிட்ட சமையல் பாத்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ஆனந்தராசு உட்பட பலர் பங்கேற்றனர்.