காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா - மேற்பார்வை குழுக் கூட்டம்

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-10 07:02 GMT

மேற்பார்வை குழுக் கூட்டம்

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுக் கூட்டம்  மேயர்  பிரியா முன்னிலையில், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்  ரஷ்மி சித்தார்த் ஐகடே தலைமையில் ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்குழுவில், மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவில் தலைவராக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் , மேயர் , சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், காவல் துறை இணை ஆணையாளர் (தலைமையிடம்) பொறுப்பு அலுவலராகவும் உள்ளனர் 15க்குழுவானது காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 145 காவல் நிலையங்கள் உள்ளன.

அனைத்து காவல் நிலையங்களிலும் தலா 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் செயல்படுகிறதா எனவும், அதன் தரவுகள் சேமிப்பு குறித்தும் மாதந்தோறும் மேற்பார்வைக் குழுவிற்கு காவல்துறையின் மூலம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இக்கூட்டத்தில் காவல்துறை இணை ஆணையாளர் (தலைமையிடம்)  கயல்விழி, இகாப சென்னை மாவட்ட வருவாய் அலுவலர்  அனுசியா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News