முதுமலையில் பாறு கழுகுகளின் கணக்கெடுப்பு பயிற்சி
பாறு கழுகுகளின் கணக்கெடுப்பில் பங்குபெறுபவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முதுமலையில் நடைப்பெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 15:46 GMT
பயிற்சியில் பங்கேற்றவர்கள்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் உத்தரவுபடியும் மற்றும் துணை இயக்குனர் அவர்களது அறிவுரைபடியும்,2023 ஆம் ஆண்டிற்கான தென்னிந்தியாவின் ஒருங்கிணைந்த பாறு கழுகுகளின் கணக்கெடுப்பு 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்பில் பங்குபெறுபவர்களுக்கான பயிற்சி, தெப்பக்காடு யானை முகாமில் உள்ள பயிற்சியகத்தில் நடைப்பெற்றது. இந்த பயிற்சியில் பாறு கழுகுகள் பற்றியும், அவற்றை எவ்வாறு கணக்கெடுப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.