திருப்பூரில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் பள்ளிகளில் அமைக்க உள்ள வாக்குச்சாவடி நேயர்கள் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-06 09:54 GMT
அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் திருப்பூர் மாவட்டம் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய 114 - திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே எஸ் சி அரசினர் மேல்நிலைப்பள்ளி, பெரிச்சிபாளையம் உயர்நிலைப்பள்ளி,
சேரன் நகர், விஜயபுரம் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் செஞ்சுரி தனியார் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் அமைக்க உள்ள வாக்குச்சாவடிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.