சமுதாயக்கூடம் கட்டுமான பணி ஆய்வு

சமுதாயக்கூடம் கட்டுமான பணியை பார்வையிட்ட பி.டி.ஒ.;

Update: 2023-12-12 10:12 GMT

சமுதாயக்கூடம் கட்டுமான பணியை பார்வையிட்ட பி.டி.ஒ.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகரில், மகளிர் குழு சமுதாயக் கூடம் கட்டுமான பணியை பள்ளிபாளையம் பி.டி.ஒ. பார்வையிட்டார். குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகரில், மகளிர் குழு சமுதாயக் கூடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த பணி தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 2019ம்  ஆண்டில் துவங்கிய பணி நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த சமுதாய கூட கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதனை பள்ளிபாளையம் பி.டி.ஒ. டேவிட் அமல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
Tags:    

Similar News