நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்த ஆய்வு நடந்தது.

Update: 2023-12-08 13:27 GMT

  திருச்செங்கோடு நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்த ஆய்வு நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்செங்கோடு நகரத்தில் உள்ள 33 வார்டுகளில் சார்பில் நடந்தள்ள பணிகள் என்ன நடக்க வேண்டியது என்ன காலதாமதம் ஏன் என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நகராட்சி ஆணையாளர் பொறியாளர் நகர் மன்றத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது.

நகராட்சி ஆணையாளர் சேகர் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆய்வு செய்தார். கூட்டத்தில் போலீஸ் டிஎஸ்பி இமயவரம்பன், திருச்செங்கோடு நகர்மன்றத்தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணைத்தலைவர் கார்த்திகேயன்,பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் வெங்கடாசலம், மற்றும் மின்துறை, நெடுங்சாலைத் துறை , போக்குவரத்துத் துறை, சுகாதாரத்துறை,வருவாய்த்துறை, குடிசைமாற்று வாரியம்,கல்வித்துறை,உள்ளிட்ட பல்வேறு தறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், செல்வி, சினேகாஹரிகரன், அண்ணா மலை, கார்த்திகேயன், கலைசெல்வி,சுரேஷ்குமார் ஆகியோர் தங்களது பகுதிகளில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , சண்முகவடிவு, கூட்டப்பள்ளியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் எனவும், புவனேஸ்வரிரமேஷ், கவுண்டம் பாளையம் சந்தைப்பேட்டை பகுதிகளில்பேருந்த நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் இடையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு இடம் தேவை என கேட்க நகராட்சிக்கு வந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமாவிடம் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணித் தலைவர் சுரேஷ்பாபு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் இட நெருக்கடி இருப்பதாகவும் கட்டிடம் கட்டும் வரை மாற்று ஏற்பாடாக ஆரம்ப சுகதார நிலையங்களை பயன் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டார். நகர்மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி உலகநாதன் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பலருக்கு தகுதி இருந்தும் இன்னும் பயன்கிடைக்கவி்ல்லை என கூறினார் இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஆட்சியர் உமா கூறியதாவது.நமது மாவட்டத்தில் 3லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அனுப்பபட்டது.66சதவீதம் என 2லட்சத்து88 ஆயிரம் பேருக்கு சாங்சன் ஆகிவிட்டது, முதல் கட்டத்தில் விண்ணப்பி த்தவர்களில் நெட் வொர்க்கில் ஏற்பட்ட கோளாறால் சிலரது பெயர் விடுபட்டது அவர்களை தனியாக அடையாளம் காண முடியாததால்,3லட்சத்து 70 விண்ணப்பங்களும்மீண்டும் அனுப்பபட்டு விடுபட்டவர்கள் கண்டறியபட்டு 38ஆயிரம் பேர்களுக்கு வழங்கப் படஉள்ளது. இதுவரை விண்ணப்பமே கொடுக்காதவர்களுக்கு மீண்டம் ஒருவாய்ப்பாக ஒரு தேதி வழங்கப்பட உள்ளது, பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டு போலியாக வங்கி கடன் பெறப்பட்டு உள்ளதால்தான் நிறைய பேருக்கு கலைஞர் மகளிர் சுய உதவி திட்டம் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது நேரில் சென்று பார்க்கும் போது உண்மையாகவே ஏழையாக அவர்கள் பெயரில் வங்கிக்கடன் உள்ளதால் வழங்க முடியவிலை தகுதி உள்ளவர்கள் அனைவருக்கும் உரிமைத்தொகை நிச்சயம் வழங்கப் படும். என கூறினார்

Tags:    

Similar News