தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு: 62தகுதியற்றவையாக நிராகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்ததில் 62 பேருந்துகள் முழு தகுதி இல்லாததால் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டது.

Update: 2024-05-09 11:28 GMT

தனியார் பேருந்துகள் ஆய்வு

விருதுநகரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு-62 பேருந்துகள் முழு தகுதி இல்லாததால் தகுதியற்றவையாக நிராகரிப்பு... விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆயுதப்படை மைதானத்தில் வைத்து வட்டார போக்குவரத்து அலுவலர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 151 பள்ளிகளில் 779 பேருந்துகள் உள்ள நிலையில் இன்று முதல்கட்டமாக தகுதி சான்று பெற்ற 654 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும், பேருந்து படியின் உயரம் 25 - 30 செ.மீ இருக்க வேண்டும், அவசர வழி இருக்க வேண்டும், தீயணைப்பு கருவிகள் இருக்க வேண்டும், வேகக்கட்டுபாட்டு கருவிகள், CCTV கண்காணிப்பு கேமரா, GPRS கருவிகள் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட 22 விதிமுறைகளின் படி பள்ளி பேருந்துகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் 592 பேருந்துகள் தகுதி பெற்ற நிலையில் 62 பேருந்துகள் முழு தகுதி இல்லாததால் முழு தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டு குறைபாடுகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 125 பேருந்துகள் தகுதி சான்று பெற்ற பின்னர் ஆய்வுக் உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வை தொடர்ந்து தனியார் பள்ளி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விபத்து காலத்தில் ஒருவருக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது அதை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் மற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனையும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டது

Tags:    

Similar News