போலீசாரால் சுடப்பட்ட குற்றவாளி மரணம்
திருநெல்வேலி மாவட்டம், தென்திருப்புவனத்தில் காவல்துறையினரால் சுடப்பட்ட குற்றவாளி சிகிச்சை பலனின்றி பலியானார்.
Update: 2024-03-11 03:04 GMT
நெல்லை மாவட்டம், தென்திருப்புவனத்தை சேர்ந்த பேச்சித்துரை மற்றும் சந்துரு இருவரும் கடந்த 7ஆம் தேதி கருப்பசாமி என்பவரை கொலை செய்துவிட்டு அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தினர். அவர்களை பிடிக்க சென்ற காவலரையும் அரிவாளால் வெட்டினர்.
இதனை தொடர்ந்து போலீசார் பேச்சித்துரையை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பேச்சித்துரை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.