பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பணி இடைநீக்கம்

ஈரோட்டில் அரசுப் பேருந்தில் ஏறிய முதியவரை கீழே தள்ளிய விவகாரத்தில் பேருந்து நடத்துனர் , மற்றும் ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-16 11:51 GMT

ஈரோட்டில் அரசுப் பேருந்தில் ஏறிய முதியவரை கீழே தள்ளிய விவகாரத்தில் பேருந்து நடத்துனர் , மற்றும் ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பஸ்நிலையத்திலிருந்து அரசு பேருந்து திருப்பூர் பஸ் நிலையத்திற்கு சென்றது.அப்போது அரசு பேருந்தில் முதியவர் ஒருவர் மூட்டைகளுடன் ஏற முற்பட்ட போது அந்த பேருந்தின் நடத்தினர் முதியவரின் மூட்டைகளை தூக்கி எறிந்த்துடன் முதியவரை கீழே தள்ளி விட்டார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்கள் பரவியது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஈரோடு கிளை பொதுமேலாளர் முதியவரை கீழே தள்ளிய கோபிசெட்டிபாளையம் பணிமனை பேருந்து ஓட்டுனர் முருகன், நடத்துனர் தங்கராசு ஆகிய இருவரையும் பணியீடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News