ஓய்வு பெறும் நாளில் செயல் அலுவலர் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி

பாலக்கோடு பேரூராட்சி அலுவலக செயல் அலுவலரை அவர் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2024-05-31 07:38 GMT

செயல் அலுவலர் டாரத்தி

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக இருப்பவர் டாரத்தி, இவர் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்த நிலையில். இன்று 31ம் தேதி அவர் பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில், நேற்று டாரத்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தர விட்டார். பணி ஓய்வு பெறும் நாளில், பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் மீதான இந்த அதிரடி நடவடிக்கை அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் சமீபத்தில் ஆவணங்கள், கோப்புகள் சிறப்பு தணிக்கை நடத்தப் பட்டது. இதில், சுமார் 2 கோடி வரை முறை கேடுகள் நடந்திருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து, மே 31ம் தேதி (இன்று) பணி ஓய்வு பெறும் நிலையில், பேரூராட்சி செயல் அலுவலரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பொம்மிடி பேரூராட்சி செயல் அலுவலர் முத்து, பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார், என தெரிவித்தனர்.

Tags:    

Similar News