திருமாவளவன் எம்பி பதவி இடைநீக்கம்: விசிகவினர் ஆர்ப்பாட்டம்

திருமாவளவன் எம்பி பதவியை இடைநீக்கம் செய்வதை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பாட்டன்ர்.;

Update: 2023-12-21 09:02 GMT

விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நகர செயலாளர் செல்வம் மற்றும் தொழிற்சங்க பிரிவு மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் ஆற்றல் அரசு முன்னிலையில், கடந்த 13ம் தேதி பாராளுமன்றத்தில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபொழுது பார்வையாளராக இருந்த மூன்றுபேர் அத்துமீறி உள்ளே நுழைந்து கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் இந்தியாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இதனை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாளவன் உள்பட எதிர்கட்சி உறுப்பினர்கள் அவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கிய பாஜக பாராளுமன்ற உறுப்பினரை கண்டித்து பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினர்.

இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத ஒன்றிய அரசு எதிர்கட்சியை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்து உத்திரவிட்டது. இதனை கண்டத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாளவனை பதவி இடைநீக்கம் செய்ததை கண்டித்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த நிகழ்வின்போது மாவட்ட செயலாளர் இனியவன், மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் முருகன், மண்டல துணைச் செயலாளர் போத்திராஜ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News