ஸ்வீட் கடை அதிபர் கொலை - இரண்டாவது மனைவி உட்பட 4 பேர் கைது

Update: 2023-11-16 02:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சுப்புராஜா மடத் தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவர் பழைய பேருந்து நிலையம் அருகே ராஜா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் கடந்த 70 ஆண்டுகள் முன்பு கடையை நிறுவி நடத்தி வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி ராஜா இறந்துவிட்ட நிலையில் இவர் நடத்தி வந்த ராஜா ஸ்வீட்ஸ் மற்றும் இவர் நடத்திய விஜய் குரு டிரஸ்ட் உள்ளிட்டவைகளை மகன் சிவக்குமார் கவனித்து வந்தார். சிவகுமாருக்கு சென்னையில் டிரஸ்ட் மற்றும் இராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் எதிரே கடை சுப்புராஜா மடம் தெருவில் வீடு என சுமார் ரூ.50 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது. சிவகுமாருக்கு கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் முறைப்படி பெரியவர்களால் நடத்தி வைக்கப்பட்டுள்ளது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்ற மூலம் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஸ்வீட் கடைக்கு வேலைக்கு வந்த இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியை சேர்ந்த காளீஸ்வரி என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு அந்த பெண் கருவுற்ற நிலையில் பெண்ணின் உறவினர்கள் சிவகுமாரிடம் பேசி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே சிவக்குமார் நடத்தி வந்த ஸ்வீட் கடையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக நடத்தாமல் மூடிவிட்டு சிவக்குமார் சென்னையில் உள்ள பிரபல ஸ்வீட் கடையில் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். இரண்டாவது மனைவி காளீஸ்வரி சிவகுமாருக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தீபாவளிக்காக சிவக்குமார் சென்னையில் இருந்து வந்துள்ளார். காலையில் மனைவி குழந்தையுடன் பட்டாசு வெடித்து புத்தாடை உடுத்தி சந்தோசமாக தீபாவளி கொண்டாடியுள்ளார் மாலை தனது இரண்டாவது மனைவி காளீஸ்வரி மற்றும் குழந்தையுடன் தனியார் ஓட்டலில் உணவருந்தி விட்டு அவருக்கு சொந்தமான காலி இடத்தை பார்ப்பதற்காக சென்றபோது அங்கு நான்கு பேர் மது அருந்தியதாகவும் அதை சிவக்குமார் தட்டிக் கேட்டதால் சிவகுமாருக்கும் அங்கு இருந்த நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டு மர்ம நபர்கள் குடிபோதையில் சிவகுமாரை குத்தி கொன்று விட்டதாக காவல் நிலையத்திற்கு காளீஸ்வரி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர் போலீசருக்கு இரண்டாவது மனைவி காளீஸ்வரி மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து கொலை நடந்த அன்றிலிருந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். பழைய பேருந்து நிலையம் மற்றும் சிவகுமார் வசிக்கும் சுப்புராஜா மட தெரு பகுதியில் அக்கம் பக்கத்தில் இடமும் விசாரணை செய்தபோது . சிவகுமார் சென்னை சென்ற நாள் முதலா காளீஸ்வரி நடத்தையில் மாற்றங்கள் இருந்ததாக தெரிவித்தனர். இதை அடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் சிவக்குமாருக்கு சொந்தமான சுப்புராஜ் மட தெருவில் உள்ள வீட்டில் ஐயப்பன் என்ற யோகா மாஸ்டர் வாடகைக்கு இருந்தபோது ஐயப்பனுக்கும் காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்த பழக்கத்தில் இருவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது என போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காளீஸ்வரிக்கும் ஐயப்பனுக்கும் கள்ள தொடர்பு இருந்ததாகவும் இது சிவகுமாருக்கு தெரிய வந்து அவர் தட்டி கேட்டுள்ளார். காளீஸ்வரி இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன் என சிவகுமாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் சிவக்குமார் சென்னையில் இருந்து வந்தவுடன் தீபாவளி அன்று தனது அப்பா சமாதிக்கு சென்று வழிபட வேண்டுமென கூறியுள்ளார். அதை பயன்படுத்திக் கொண்ட காளீஸ்வரி ஐயப்பனுக்கு தகவல் தெரிவித்து ஐயப்பனுடைய நண்பர்களான மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ், ஆப்பனூர் பகுதி சேர்ந்த மருதுபாண்டியன் ஆகியோரை அந்த இடத்துக்கு வரவழைத்துள்ளார். சிவகுமார் மற்றும் காளீஸ்வரி மகன் குருச்சரன் ஆகியோர் தீபாவளி என்பதால் மூன்று பேரும் ஒரே கலரில் உடை அணிந்து தனது தகப்பனார் இறந்த இடத்தில் உள்ள சமாதியை சென்று பார்வையிட்டுள்ளனர் அப்பொழுது அங்கு வந்த ஐயப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளான விக்னேஷ் மருதுபாண்டியன் ஆகியோருடன் காளீஸ்வரியும் சேர்ந்து சொத்துக்களை எல்லாம் காளீஸ்வரி பேருக்கு மாற்றித் தரும்படி மிரட்டியுள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சிவகுமாரை சரமாரியாக தாக்கி கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். என காளீஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து காளீஸ்வரி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News