மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி

சேலத்தில் தொடங்கிய பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான டி 20 கிரிக்கெட் போட்டியில் 28 அணிகள் கலந்து கொள்கின்றனர்.

Update: 2024-01-12 03:14 GMT

டி 20 கிரிக்கெட் போட்டி

சேலம் மாவட்ட மாணவர் கிரிக்கெட் சங்கம் சார்பில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் டி-20 கிரிக்கெட் போட்டி வருகிற 20-ந் தேதி வரை சேலத்தில் 4 இடங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 10 அரசு பள்ளிகள், 6 அரசு உதவிபெறும் பள்ளிகள், 6 சி.பி.எஸ்.இ. பள்ளிகள், 6 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 28 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. மாவட்டம் முழுவதிலும் இருந்து 375 மாணவர்கள் பங்கேற்கின்றனர். சூரமங்கலம் நீலாம்பாள் பள்ளியில் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடந்தது. வக்கீல் செல்வகீதன் தலைமை தாங்கினார். தலைவர் முத்துக்குமார், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேலம் கோகுல்நாதா பள்ளி அணியும், அயோத்தியாப்பட்டணம் அரசு பள்ளி அணியும் விளையாடின. இதில் அயோத்தியாப்பட்டணம் பள்ளி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து சங்க தலைவர் முத்துக்குமார், செயலாளர் அசோக் ஆகியோர் கூறுகையில், கிரிக்கெட் போட்டியில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. முடிவில், 4 அணிகள் தேர்ந்தெடுத்து 20 சிறந்த வீரர்களை இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அழைத்து செல்ல இருக்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News