தைபூச விழா : 7 ஊர் சாமிகள் தீர்த்தவாரி

புதுக்கோட்டை நகர எல்லையில் உள்ள வெள்ளாற்றங்கரையில் தை பூசத்தை முன்னிட்டு 7 ஊர் சாமிகள் தீர்த்தவாரி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-01-26 07:02 GMT

தைபூச விழா உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாள் கோலாகலமாககொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான்ஆலயங்களிலும் சிவ தலங்களிலும்பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்தும், புதுக்கோட்டை பூசத்துறையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புதுக்கோட்டை பூசத்துறையில் தைபூசத்தை முன்னிட்டு புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி..,திருவேங்கைவாசல்பெரியநாயகி சமேதர வியாக்ரபுரிஸ்வரர், வெள்ளனூர் பிரகதம்பாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோகர்ணம்பிரகதம்பாள்சமேதரகோகர்ணேஸ்வரர், கோட்டூர் மீனாட்சியம்மன் சமேதர சுந்தரேஸ்வரர், திருமயம் வேணுவனேஸ்வரி உடனுறை சத்தியகிரிஸ்வரர், விராச்சிலை சவுந்தரநாயகி உடனுறை வில்வனேஸ்வரர் ஆகிய சிவஸ்தலங்களிள் இருந்து அம்பாள் சமேதர சிவபெருமாள் சப்பரங்கள் தேர்களில் பல கிலோமீட்டருக்கு வீதியுலா வந்து வெள்ளாற்றங்கரையில் இருபுறமும் எழுந்தருளி தீர்த்தவாரியாடி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது ஆண்டு தோறும் நடைபெறும் பெரிய திருவிழா நிகழ்ச்சியாகும்.

Advertisement

இந்த ஆண்டும் தை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு பூச நட்சத்திர தினமான இன்று ஸப்த ஸ்தலங்களை சேர்ந்த மூர்த்திகள் தீர்த்தவாரியாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை பூசத்துறையில் இந்த ஆண்டு புதுக்கோட்டை,திருவேங்கைவாசல் கோட்டூர் விராச்சிலை, திருவேங்கைவாசல், ஆகிய ஊர்களை சிவ ஸ்தலங்களில் இருந்து அம்பாள் மற்றும் உற்சவ பெருமாள் ஆற்றங்கரைக்கு வருகை தந்து தீர்த்தவாரி ஆடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள்விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் இவ்விழாவின் மூலம் பக்தர்கள் பல்வேறு கிராம மக்களிடம் நல்லுறவும் வலுப்படும். நிகழ்ச்சிக்கனா ஏற்பாடுகளை அறநிலையதுறை அதிகாரிகள், திருக்கோயில்  மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் அறநிலைய துறை அலுவலர்கள் செய்திருந்தனர்

Tags:    

Similar News