மதுரையில் தமிழ் கூடல் நிகழ்ச்சி
மதுரையில் உலகத் தமிழ் சங்கமும் மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய தமிழ் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகத் தமிழ்ச் சங்கமும் ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியும் இணைந்து இன்று தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தது. புதுச்சேரிவாழ் தமிழறிஞர் கலைமாமணி தி. அமிர்தகணேசன் திக்குகளின் கவிதைகள் தீந்தமிழில் என்னும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார்.
அவர்தம் உரையில், "எதேச்சதிகார காலகட்டத்தில்தான் தமிழ்க்கவிதை பிறந்தது. 160 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதநாயகம்பிள்ளையின் நீதிநூல் உருவான காலத்தில் தமிழில் கவிதை இலக்கியம் உருவானது. தமிழ்ப் புதுக்கவிதையின் திறவுகோல் வால்ட்விட்மன் ஆவார். பாரதியாரின் வசனகவிதை அதன்பிறகே உருவானது. வானம்பாடிக் காலம் கவிதைக்கு இன்னொரு புத்தொளியைத் தந்தது. அயலக வகைமையில் முதலில் தமிழுக்கு வந்த கவிதைவடிவம் ஹைக்கூ ஆகும்.
அதனைத் தமிழுக்கு முதன்முதலில் கொண்டு வந்தவர் பாரதியார். கவிஞர் அமுதபாரதி முதல் ஹைக்கூ நூலை வெளியிட்டார், மரபு இலக்கணத்தைக் கற்று. தெளிந்து மீறவேண்டும். அதுதான் சிறந்த பதுமையாக இருக்கும் என்றார். புலவர் ச. ந இளங்குமரன் அவர்கள் 'தொல்லியல் சுவடுகளும் சங்கப் பாடல்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவர்தம் உரையில், 'சங்க இலக்கியம் தொல்லியலோடு பார்க்கப்பட வேண்டும். இறந்தவரை புதைக்கும் பழக்கம் சங்க காலத்தில் இருந்தது. தமிழர்களின் பெரும்பகுதி வரலாற்று குறிப்புகளைத் தமிழகக் கோவில்களின் சுற்றுச்சுவர் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன" என்று குறிப்பிட்டார்.