உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி - வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி ராசிபுரத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-06 15:46 GMT

தமிழை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி, சென்னையில் தொடர் உண்ணா  நிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு அளித்தும், தமிழை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி ஏற்கனவே JAAC பொதுக்குழு இயற்றப்பட்ட தீர்மானத்தினை வலியுறுத்தியும், புதன்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி ராசிபுரம் நீதிமன்ற வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து வழக்கறிஞர்களையும் (JAAC) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு இணைந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வன், பொருளாளர் ரவி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு-JAAC) உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News