தமிழ் வழக்காடு மொழி - வழக்கறிஞர்கள் போராட்டம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-03-07 04:04 GMT
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்தி 8 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்கள் உள்ளிட்ட 25 பேரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், உடனடியாக தமிழை உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் வேலுகுபேந்திரன் தலைமை வகித்தார். இதில், வழக்கறிஞர்கள் ஷங்கமித்திறன், பிரபாகரன், சுரேஷ் உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி பேசி முழக்கங்களை எழுப்பினர்.