தமிழக பட்ஜெட் குறித்து காணொளி காட்சி வாயிலாக விளக்கம்
கரூர் பேருந்து நிலையத்தில்,தமிழக பட்ஜெட் குறித்து காணொளி காட்சி வாயிலாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கரூர் பேருந்து நிலையத்தில்,தமிழக பட்ஜெட் குறித்து காணொளி காட்சி வாயிலாக பொதுமக்களுக்கு விளக்கம். தமிழக அரசின் 2024 - 25-ம் நிதி ஆண்டுக்கான, தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனை ஊடகங்களில் நேரடியாகவும், செய்தித்தாள்களில் செய்தி ஆகவும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பகிரப்பட்டது. ஆயினும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்,
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக, வாகனத்தில் காணொளி காட்சி வாயிலாக கரூர் பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. நேற்றைய பட்ஜெட்டில் வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமையும், முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதன்படி 5 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு அரசின் பல்வேறு உதவிகள் வழங்கும் சிறப்பு திட்டமும், கிராமங்களில்,
குடிசைகளில் வசிப்பவர்களுக்கு 8- லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதனால், அரசு அறிவித்த திட்டங்களை அறியும் வகையில், பேருந்தில் பயணிக்க வந்த பொதுமக்கள் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க உரையை கூர்ந்து கவனித்தனர்.