திருவாரூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தார் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி .ஆர் .பாண்டியன்;
Update: 2023-12-02 06:47 GMT
திருவாரூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி .ஆர் .பாண்டியன் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது ,காவிரி டெல்டா விவசாயம் பாதிப்பிற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். ஜூலை மாதமே சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு தண்ணீரை பெறுவற்கு காலம் கடத்தியதால் குறுவையும் இழந்து சம்பா, தாளடி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5,000 வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.